இப்பொழுது புரிகின்றதா part 02
""இப்பொழுது புரிகின்றதா"""
.
பாடம் :2
ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்!
.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்
.
உண்மை :-4 ன் தொடர்ச்சி,
.
ரகசிய வருகை பற்றிய தவறான உபதேசத்தை சற்றே திருப்பி பார்ப்போம்.
அது நான்கு அடிப்படையான தவறுகளை பின்பற்றுகிறது.
.
1) இயேசு ரகசியமாக வந்து பரிசுத்தவான்களை மட்டும் எடுத்துகொள்வார்.
.
2) அதை தொடர்ந்து இவ்வுலகில் உண்டாகும் ஏழு வருட உபத்திரவ காலத்தில், ரகசிய வருகையில் எடுத்துகொள்ளப்படாத மற்ற அனைவருக்கும் தேவனோடு ஒப்புரவாக இரண்டாவது சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.
.
3) அந்த ஏழு வருட உபத்திரவ காலத்தில் அந்திகிறிஸ்து வெளிப்படுவான்.
.
4) அந்த ஏழு வருடத்திற்கு பிறகு இயேசு மீண்டும் வந்து எல்லாவற்றிற்கும் முடிவு உண்டாக்குவார்.
.
இவற்றில் எதுவுமே வேதாகமத்தில் உபதேசிக்கபடவில்லை.
இது வேதவசனங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ளாமலும், அநேக உண்மைகளை கருத்தில் கொள்ளாமலும் எடுத்துகொன்ட சில வசனங்களை கொன்ட திட்டமிட்ட சதி செயல் ஆகும்.
இதற்கு வேதாகமத்தின் பதில் என்னவென்று பார்ப்போம்.
.
"ரகசிய வருகை" பற்றிய உபதேசம் தவறாக எண்ணிக்கொன்ட இரண்டு வசனங்களின் அடிப்படையில் உண்டானது.
முதலாவது வசனம் 2பேதுரு 3:
10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.
.
இயேசு ரகாசியமாக வருகிறாரென ஒருவரை நம்பவைப்பதற்காக, இங்கு வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொன்டு திரித்து கூறப்பட்டுள்ளது.
அந்த வசனத்தின் அர்த்தம்(Context) என்னவென்பதையும், அதோடு முழுவசனத்தையும் வாசிப்போமாக.
2பேதுரு 3:3,4,10
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
2 பேதுரு 3:3
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
2 பேதுரு 3:4
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
2 பேதுரு 3:10
.
இரவிலே திருடன் என்பதற்கு "ரகசியம்" என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை.
ஏனெனில் வானங்கள் மடமட வென்று பெரும் சத்தத்தோடு அகன்று போகுதல் மற்றும் பூமி உருகிபோகுதல் ரகசியமாக நடைபெறுதல் அல்ல.
ரகசிய வருகை பற்றி போதிக்கும் போதகர்கள் ஏன் முழு வசனத்தையும் வாசிப்பதில்லை என்பதற்கான காரனம் இப்போது புரிகின்றதா?
ஜனங்கள் பரியாசத்தோடு எதிர்பார்க்காத சூழ்நிலையில் வாழும்போது கர்த்தருடைய வருகையின் நாள் இருக்கும் என்பதை இந்த வசனங்கள் மூலமாக நாம் அறிந்துகொள்கிறோம்.
.
மேற்கோள் காட்டும் இரண்டாவது வசனம் மத்தேயு 24:40,41
"ஒருவன் ஏற்றுகொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்"
மறுபடியும் இயேசுவின் வருகை ரகசியவருகை என சுட்டிகாட்டுவதற்காக இந்த வசனமும் அதன் அர்த்தத்தில் இருந்து தவறாக எடுத்தாளப்படுகிறது.
இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே அது ரகசிய வருகையை பற்றியதல்ல என்பதை பற்றி தெளிவாக அறியலாம்.
இயேசு வரும் போது சிலர் எடுத்துகொள்ளபடுவார்கள் சிலர் கைவிடப்படுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது.
நீதிமான் பரலோகம் செல்வர்.
துன்மார்க்கர் கைவிடப்படுவர் என்பது வெளிப்படையான உண்மை.
இப்போது அந்த வசனத்தின் தாற்பரியத்தை கவனியுங்கள்.
நோவாவின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கும், இரண்டாம் வருகையில் நடைபெறபோகும் நிகழ்ச்சிக்கும் ஒரு இனைக்கோடு இட்டு கான்பிக்கிறார்.
.
மத்தேயு 24 :36-39.
36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
மத்தேயு 24:36
37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
மத்தேயு 24:37
38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,
மத்தேயு 24:38
39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
மத்தேயு 24:39
.
நோவாவின் காலத்தில் சிலர் பேழைக்குள் பிரவேசித்து இரட்சிக்கப்பட்டார்கள்.
மற்றவர்கள் அழிவுக்கு ஒப்புகொடுக்கப்பட்டார்கள்.
.
Comments
Post a Comment