உபத்திரவப்படுத்தபட்ட உண்மை கிறிஸ்தவர்கள்
""உபத்திரவப்படுத்தபட்ட உண்மை கிறிஸ்தவர்கள்"""
.
'வெளியீட்டாளரின் அறிமுக உரை:-
.
சாத்தான் சபைக்குள்ளும் தனது ஏதுகரங்களை பக்கவழியாய் அனுப்பி அகோர சிரிப்பு சிரித்தான்.
சத்தியத்தை மிதித்து அழித்துவிட மனித ஏதுகரங்களை பயன்படுத்தினான்.
பரிசுத்தஸலத்தில் பாவமனிதன் நிற்பதே அருவருப்பு என்பதை புரிந்துவிட்ட தூய சபையானது, தன்னை அவ்விடத்தில் இருந்து பிரித்துகொன்டது.
அருவெருப்பாகிய போதனைகள் தங்களையும் பாழாக்கி விடாதபடிக்கு, கிறிஸ்து யூதர்களுக்கு, எருசலேமின் அழிவில் தப்பிக்க கூறியிருந்த ஆலோசனையை பின்பற்றலானது.
கிறிஸ்துவின் சபை வனாந்திரமாகிய காடுகள் மற்றும் மலை குன்றுகளுக்கு கழுகை போல தீவிரித்து சென்றடைந்தது.
பரலோகத்தின் அதிகாரத்தை பெற்று கொள்வதற்கு, வெறிகொன்டவனாய் சாத்தான் கலகம் செய்ததை போல, போப்புவும் அவனது சகாக்களும் அதிகார வெறியில் தான்டவமாடினர்.
.
உலகம் அனைத்தும் எங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கையில், சொற்ப கூட்டம் மட்டும் வேதாகமத்தை கைக்கொன்டு எங்களை எதிர்க்கிறதே!
வேதத்தை மாற்றவும், உலகத்தை ஆளவும் தேவனை போன்ற அதிகாரத்தை பெற்ற எங்கள் கட்டுபாட்டிற்குள் வராத எவராயினும் அழிக்கபட்டாக வேண்டும் என்று கங்கனம் கட்டி கொன்டு வேட்டையாடினர்.
பக்தியுள்ள மனிதர்கள் விலங்குகளை போல வேட்டையாடப்பட்டனர்.
கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
They were stoned, they were sawn asunder, were tempted, were slain with the sword: they wandered about in sheepskins and goatskins; being destitute, afflicted, tormented.
உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
(Of whom the world was not worthy:) they wandered in deserts, and in mountains, and in dens and caves of the earth.
எபிரேயர் 11:37,38
.
பரலோக ஒளி அவர்கள் பாதையை செவ்வைபடுத்தி இருந்தது.
அவர்கள் ஒவ்வொரு முறை உபத்திரவத்துக்கு உட்படுத்தபட்ட போதும், சங்கீதகாரரின் பாடலாகிய,
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
It is good for me that I have been afflicted; that I might learn thy statutes.
சங்கீதம் 119:71
என்னும் வரிகளை நெஞ்சுருக பாடியிருந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையிலும், தங்கள் கால்களுக்கு தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமாயும் இருந்த வேதபிரமானத்தை விட்டு விடவில்லை.
அவர்கள் அதை பற்றி கொள்ள பரலோகம் அவர்களை பலப்படுத்தி இருந்தது.
.
ஊழியக்காரன் ஒருவனின் ஊழியம் முடியும் வரை பரலோக சேனையின் பிரதிநிதி ஒருவன் அவனருகில் நின்றுகொன்டே இருந்தான்.
அந்த ஊழியக்காரன் அவனது கடைசி சொட்டு உதிரத்தை விட்டு தனது ஊழியத்தை நிறைவடைய செய்த போது, அந்த பரலோக பிரதிநிதி தன்னுடைய வேலையை நிறைவடைய செய்ய இயலவில்லை.
ஏனெனில், அந்த ஊழியனின் ரத்த சாட்சி, அவனது பின்னடியாளனை கிறிஸ்துவுக்காய் ஆயத்தபடுத்தி இருந்தது.
இளையவனின் ஊழியம் நிறைவேறும் அளவும், பரலோக தூதனின் ஊழியம் நீன்டுகொன்டே இருந்தது.
.
தொடரும்......
Comments
Post a Comment