ஆக்கினை_தீர்ப்பு_உண்டு
#ஆக்கினை_தீர்ப்பு_உண்டு.
தேவனை விசுவாசியாதவர்களுக்கு
ஆக்கினை தீர்ப்பு உண்டு.
விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் [மாற்கு:16:16].அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று
[யோவான்:3:18].
நம்முடைய தேவனாகிய கர்த்தர் தன் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி நம்மை மீட்டுக் கொள்ளும்படி நம்முடைய பாவங்கள் அக்கிரமங்களுக்காக அவரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது இந்த ஆக்கினை தீர்ப்பினின்று விடுவிக்கப்படுவான். இயேசு கிறிஸ்து கூறுகிறார் என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1) #சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு [2தெசலோனிக்கேயர் :2:10-11]. இயேசு கிறிஸ்துவே நமக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். அவருடைய வசனமே சத்தியம். வேதம் கூறுகிறது சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அவரே நமக்கு சத்தியம்; அவருடைய வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்; சத்தியத்தை விசுவாசிக்கிறவன் இரட்சிப்படைகிறான். ஆனால் சாத்தானோ பொய்யன்.
வேதம் கூறுகிறது அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்[யோவான்:8:44]. நாமும் தேவ மகிமையை தேடாமல் நம் சுயமாய் செயல்படும் போது அநீதியில் பிரியம் வைக்கிறோம். வேதம் கூறுகிறது அநீதியெல்லாம் பாவந்தான்[1யோவான்:5:17].
சுயமாய் பேசுகிறவன் தன் சுயமகிமையை தேடுகிறான்.தன்னை அனுப்பினவரின் மகிமையை தேடுகிறவனோ உண்மையுள்ளவனாய் இருக்கிறான். அவனிடத்தில் அநீதியில்லை [யோவான்:7:17].
ஆவிக்குரிய வாழ்க்கையில் சுயமகிமையை நாடி வேஷம் போடும் போது நம் பெருமையினால் தேவனை தூஷிக்கிறோம் என்பதை நாம் மறந்துபோக வேண்டாம். எதை செய்தாலும் நம்முடைய சுயமகிமையை நாடாமல் பிதாவாகிய தேவனுக்கு மகிமையை செலுத்தி தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாய் வாழுவோம். சத்தியம் என்னும் கச்சையை நம் அரையில் கட்டிக்கொள்ளும்போது நம்மில் அநீதி காணப்படுவதில்லை. சத்தியத்தை விசுவாசித்து சத்தியத்தில் நிலைத்திருபோம்.
ஆமென்.
Comments
Post a Comment