""இப்பொழுது புரிகின்றதா"""
.
பாடம் :2
ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்!
.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள் 
.
உண்மை :-4 ன் தொடர்ச்சி,
.
ஏழுவருட உபத்திரவம் குறித்து 7வது அத்தியாயத்தில் தெளிவாக படிப்போம்.
ஆயினும் சில கேள்விகளை கேட்டுபார்க்க வேண்டும்.
.
இரட்சிக்கபடுவதற்கு இரண்டாம் சந்தர்ப்பம் என ஒன்று இருக்கிறதா?
அப்படி ஒன்று நிச்சயமாகவே இல்லவே இல்லை.
இது குறித்து வேதாகமம் கூறுவது என்ன?
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 
வெளிப்படுத்தின விசேஷம் 22:11

12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 
வெளிப்படுத்தின விசேஷம் 22:12

கிறிஸ்து வரும்போது ஒவ்வொருவனுடைய காரியமும் தீர்மானிக்கப்பட்டுவிடும்.
.
அடுத்து,  அந்திகிறிஸ்து எப்போது தோன்றுவான்?
கடைசி உபத்திரவம் உன்டாகும் போதா?
வேதாகமம் அப்படி சொல்லவே இல்லை.
"அந்திகிறிஸ்து அல்லது மிருகம் என்பது ஒரு வல்லமை அல்லது ராஜ்ஜியமாகும்.
மேலும் பொய்யின் ஆவி இயேசு கிறிஸ்துவின் காலம் முதலே கிரியை செய்து கொன்டிருக்கிறது.
யாரோ ஒரு மனிதன்( அந்திகிறிஸ்து) திடிரென கடைசிகாலத்தில் தோன்றுவான் என்பது அர்த்தமல்ல.
.

3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 
1 யோவான் 4:3
10 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான், அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது, அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, 
வெளிப்படுத்தின விசேஷம் 16:10

.
பாவமனுசனும் அந்திகிறிஸ்துவுமாகிய அவன் தன்னுடைய வேலையை முழுமையாய் நிறைவேற்றும் மட்டும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோ அல்லது பரிசுத்தவான்கள் எடுத்துகொள்ளபடுதலோ நடைபெறாது என்பதை பவுல் அப்போஸ்தலன் மிகத்தெளிவாக கூறுகிறார்.
.

1 அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 
2 தெசலோனிக்கேயர் 2:1

பவுல் இங்கே இரண்டாம் வருகையையும் பரிசுத்தவான்கள் எடுத்துகொள்ளபடுவதையும் தெளிவாக அடையாளப்படுத்துகிறார்.
வசனம் 3,4 ஐயும் கவனியுங்கள்.

3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 
2 தெசலோனிக்கேயர் 2:3

4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 
2 தெசலோனிக்கேயர் 2:4

.
பாவமனுசன் வருமட்டும் அந்தநாள் ( கிறிஸ்துவின் வருகை மற்றும் பரிசுத்தவான்கள் எடுத்துகொள்ளப்படும் நாள்)
வராது என்பதை பவுல் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்.
மேலும் 7ம் வசனத்தில்
""7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது."
என்று குறிப்பிடுகிறார்.
.
கடைசியாக,  கிறிஸ்துவின் வெவ்வேரான இரண்டு வருகைகள் இருக்கிறதா?
அப்படிப்பட்ட உபதேசத்தை வேதாகமம் முழுவதும் தேடினாலும் கான முடியாது.
ஜனங்கள் தவறான நம்பிக்கையை கொன்டிருப்பதால் ரகசிய வருகையை நம்புவோர் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றனர் என்பதை கவனியுங்கள்.
.
1) உபத்திரவத்தை குறித்து நான் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அப்போது நான் இங்கிருக்கமாட்டேன்.
.

2) ஒருவேளை ரகசிய வருகையில் நான் எடுத்துகொள்ளபடாவிடினும் அடுத்த ஏழு ஆண்டுகளில் பரலோகம் செல்ல வாய்ப்புன்டு.
.
3) அந்திகிறிஸ்துவையோ அல்லது மிருகத்தை வணங்க வேண்டுவதையோ அல்லது அதை பின்பற்றுவதை குறித்தோ நான் கவலைப்பட வேண்டியதில்லை.
ஏனெனில் நான் அப்போது இங்கு  இருக்கமாட்டேன்.

.
கிறிஸ்துவின் நாட்களில் பொய்யை நம்பி ஏமாந்தது போல் ,இன்றும் கோடிக்கனக்கானோர்  இந்த பொய்யை நம்பி ஏமாந்து கொன்டிருக்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு மெய்யான நிகழ்ச்சி.
அதை நாம் கானவும்,  கேட்கவும் முடியும் என்று கண்டோம்.
அந்த உண்மையை பின்பற்றுவோமா.

.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று