உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்

உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்"""
.
வெளியீட்டாளரின் அறிமுக உரை:-
எது எப்படியாயினும் தேவனுடைய பிள்ளைகள் யுகங்கள் நெடுகிலும் அவருக்கென நின்றிருந்தனர்.
வேதாகமம் மட்டுமே எங்கள் வாழ்வின் சட்டம் எனவும், தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட வேதவாக்கியங்களே தங்களது அஸ்திவாரம் எனவும்,  அவர்கள் பறைசாற்றி இருந்தனர்.
ஆதிகால அப்போஸ்தல சபையானது, தனது ஆதி விசுவாசத்தை விட்டு விலகிய போது, வேதாகமத்தை விட சபையின் அதிகாரம் மேலானது என வேத வாக்கியங்களை திரித்து கூறியிருந்த போதும், அவர்கள் கடைசி காலத்தில் வாழ்ந்து கொன்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய்,
ஆராதிக்கபட வேண்டிய தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தி,  பாவ மன்னிப்பை என்னால் தரமுடியும் என கூறிகொன்ட போப்புவே பாவமனுசன் எனவும் என்பதையும், 
தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல கான்பித்து, தன்னை போப்பு ஆண்டவர் என அழைத்து கொள்ளும் அவனே கேட்டின் மகன் (2 தெச 2:3,4) என்பதையும் இனங்கன்டு கொன்டனர்.
சமுதாய சீர்கேடுகளின் பிறப்பிடமாகவே போப்புவும் அவரது குருமார்களும் விளங்கினர்.
.
"போப்பான்டவரும் " ஏனைய குருமார்களும் இளவரசர்களை போன்று ஆடம்பரமாக வாழ்ந்தனர்.
ஊழல்கள் மூலம் ஏராளமான சொத்துகளை குவித்தனர்.
ஆடம்பரம், ஒழுக்ககேடுகள், சூதாட்ட விடுதிகள் என்பவற்றுக்குள் குருமார்கள் வாழ்ந்தனர்.
( சமூக அறிவியல் 9ம் வகுப்பு,  சமச்சீர் கல்வியான்டு 2011- 12,  சமய சீர்திருத்தம் 49.2)
.
யூதர்களால் எதிர்பார்க்கபட்டு இருந்த அந்தி மேசியாவும்,  கிறிஸ்துவார் முன்னறிவிக்கபட்டு இருந்த அந்திகிறிஸ்துவும் இவனே என உறுதிபடுத்தி இருந்தனர்.
கிறிஸ்தவ உலகின் பன்டைய தீர்க்கதரிசிகளில் ஒருவரான யூதாவின் வார்த்தைகளை மிகச்சரியாக புரிந்து வைத்து இருந்தனர்.
தேவனுடைய பக்தி மார்க்கத்திற்கு விரோதமாய்,  கிறிஸ்துவை மறுதலிக்கிற போப்பு மற்றும் அவனது பின்னடியார்கள் பக்க வழியாய் சபையில் நுழைந்ததை கன்டனர்.
(யூதா 4)
.
தங்களால் முடிந்த அளவிற்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாச தூன்களாகிய பரிசுத்த கற்பனை மற்றும் வேத வாக்கியங்களுக்காய் போராடினர்.
சத்தியத்தின் கொள்கைகளை அவமதிக்கலாகாது.
அது அழிவுக்கு நேராக தம்மை வழிநடத்தும் என சக விசுவாசிகளாயும், ஊழியக்காரர்களாய் இருந்த போப்பு மற்றும் அவனது நண்பர்களுக்கு இயன்றவரை எடுத்துரைத்தனர்.
நிர்வாக அதிகாரத்தை உடையவன் சுயாதினனை உபத்திரபடுத்துவது போல, தேவனுடைய பிள்ளைகள், தங்கள்  உடன் சகோதரர்களால் துன்படுத்தபட்டனர்.
வேதவாக்கியங்களை விட்டு, பாரம்பரியங்களை பின்பற்றி சோரம் போனதும்,  விபச்சாரியாகி விட்டதுமான மருள விழுந்த சபையினால் கொலை செய்யப்பட்டனர்.
.
திருச்சபையின் (ரோமன் கத்தோலிக்க சபை) கோட்பாடுகளுக்கும்,  கருத்துக்களுக்கும் இசைவில்லாத எதுவும் "மதவிரோதம்" என கூறப்பட்டது.
இந்த மதவிரோத செயலுக்காக,  மாற்று கருத்தை வெளியிட்டவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
எடுத்துகாட்டாக,
1415ம் ஆண்டு" ஜான் ஹஸ் " என்ற மதகுரு இவ்வாறு நெருப்பிலே பொசுக்கப்பட்டார்.
( சமுக அறிவியல், 9ம் வகுப்பு.  சம்மச்சீர் கல்வியான்டு 2011-12,  சமய சீர்திருத்த இயக்கம், பக் 49.3)
.
" அவர் கம்பத்துடன் கட்டப்பட்டபோது,  நெருப்பு மூட்டுவதற்கு அனைத்தும் தயாரான போது,  அவரது தவறை ஏற்றுகொள்ளும் படியாக அவர் மறுபடியும் எச்சர்க்கபட்டார்.
" எந்த தவறுகளை நான் ஏற்பேன்,  நான் குற்றமில்லாதவன் என்பது எனக்கு தெரியும்.  நான் எழுதினவைகளும்,  பிரசங்கித்த சத்தியத்தையும் மிக மகிழ்ச்சியுடன் எனது இரத்தத்தினால் உறுதி படுத்துகிறேன் என்றார்.
.
அவரை சுற்றிலும் வைக்கப்பட்ட நெருப்பு தழல்கள் உயர்ந்தவைகளாய் கொழுந்துவிட்டு எரிந்தபோது , நித்தியமாக அவரது சத்தம் மௌனமடையும் வரை,  அவர் இயேசுவே!  தாவீதின் குமாரனே!  எனக்கு இரங்கும் என பாடதொடங்கினார்.
.
அவரது வீரத்தை கன்டு அவரது எதிரிகளும் கூட திகைப்படைந்தனர்.
ஹஸ் ரத்தசாட்சியானது பற்றி வைராக்கியமிக்க போப்பு மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் இவ்விதமாக விவரித்தார்.

""ஹஸ்ஸும் அவருக்கு பின்பு விரைவில் இறந்த ஜெரோமும் அவர்களது கடைசி மனி நேரம் வந்தபோது,  இருவரும் ஒரே எண்ணமுடையவர்களாக இருந்தனர்.
அவர்கள் ஒரு திருமன விருந்துக்கு செல்வது போல,  தங்களை தெருப்புக்கு ஆயத்தம் செய்தனர்.
அவர்கள் வேதனையை பற்றி அழுது புலம்பவில்லை.
நெருப்பு தழல்கள் உயர்ந்த போது  அவர்கள் தெய்வீக பாடல்களை பாடதொடங்கினர்.
அவர்களது பாடல்களை நெருப்பின் பயங்கரத்தால் நிறுத்தமுடியவில்லை.""
.
(Elllan g white,  the great controversy. P . 109)

.
தொடரும்....

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று