உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்
"""
உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்"""
.
வெளியீட்டாளரின் அறிமுக உரை:-
சரித்திரமானது எப்போதுமே உண்மையை களைந்துவிடுவதில்லை.
அதே சமயத்தில் சரித்திரம் என்னும் போர்வையில், சரித்திர ஆசிரியர்களால் தரப்படும் பொய் செய்திகளும் சரித்திரமாகி விடுவதில்லை.
உண்மையை சொல்லும் சரித்திர ஆசிரியர்கள் யுகங்கள் நெடுகிலும் ஒரு சிலராகவே இருந்ததுன்டு.
அவர்கள் துன்பங்களையும் அடைந்தது உண்டு.
சரித்திரம் என்பது ஒரு பேரரசின் சிறப்புகளையும், சாதனைகளையும், கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் செதுக்கி வைத்து விடுவதோடு நின்றுவிடாமல், அதன் குறைகளையும் எடுத்து கூறி, நல்முடிவை நடைமுறைபடுத்துவதும், அதை பின்சந்ததியாருக்கு படிப்பினையாய் எடுத்து தருவதுமே ஆகும்.
அத்தகைய சரித்திரமே உண்மை சரித்திரமாகும்.
.
சுவையூட்டும் பொய்யான நற்செய்திகளை மட்டுமே கூறி,
கசப்பான உண்மைகளை மறைத்து விடுகின்ற, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிமித்தம் விட்டு விட நிர்பந்திக்க பட்டதினால் மாற்றி விடுகின்ற ஒரு சரித்திர ஆசிரியரையோ அல்லது மானவரையோ உண்மை சரித்திரவியலாளர்கள் அங்கிகரிக்க மாட்டார்கள்.
அதே சமயத்தில் மறைக்கபட்டு விட்ட சரித்திரத்தை அறிந்து விட, ஒவ்வொரு சரித்திர ஆர்வலரின் மனதும் துடிக்கிறது என்பதையும் அவர்கள் மறந்துவிட மாட்டார்கள்,
மறுத்து விட மாட்டார்கள்
.
நன்று! இப்புத்தகத்தை ஆராயும் சரித்திரவியலாளர்கள் தங்கள் கன்களை அகல விரித்து வியந்து விடுமளவிற்கு தகவல்கள் தரப்பட்டு இருந்தாலும்,
சரித்திர முன்னறிவு இல்லாதோர் இப்புத்தகத்தை படிக்க நேரிட்டால், புரிந்து கொள்ள இயலாமற் போகலாம் என்ற என்னத்துடன்,
சரித்திரத்தை உற்று நோக்கும் சரித்திர மானாக்கர்களின் அனுபவ அறிவு விரிவுபடும், என்ற முன்னோக்கு சிந்தனையுடனுமே இந்த அறிமுக உரை எழுதப்படுகிறது என்பதை வாசிப்போர் நினைவில் கொள்வார்களாக.
.
* 1260 வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி புரிந்த போப்பாதிக்கத்தினை அறிந்திராத சரித்திர மானவர்கள் எவரும் இருக்க இயலாது.
அவ்வாறு இருப்பார்களெனில், அது மிக சொற்பமானோரே யாவர்.
அநேகமாயிரம் மக்களை உலகெங்கிலும் கொன்று குவித்திருந்தது.
போப்பரசு, கிறிஸ்தவ சபையின் ஆதிதலைமை மூப்பர்கள் என்று அழைக்கப்பட்ட போப்புகள் அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒருங்கே தனது கட்டுபாட்டின் கீழே வைத்திருந்து, உலகை ஆட்டிபடைத்தனர்.
.
சரித்திரத்தினூடே நோக்கினால்,
* கிமு 606 -538 வரையில் நேபுகாத் நேச்சரின் பாபிலோனிய பேரரசும்
* கிமு 538- 331 வரை மேதியனாகிய தரியு மற்றும் பெர்சியனாகிய கோரேசின் தலைமையிலான மேதிய பெர்சிய பேரரசும்,
* கிமு 331-168 வரை மகா அலெக்ஸான்டரின் தலைமையிலான கிரேக்க பேரரசும்,
* கிமு 168 -கிபி 436வரை ராயர்களின் தலைமையிலான ரோமப்பேரரசும்,
உலகை தனது கட்டுபாட்டின் கீழே வைத்திருந்த வல்லரசுகளாக விளங்கின.
ரோம பேரரசிற்கு பின்னர், சுவிசேசத்தை பிரசங்கித்திருந்த கிறிஸ்தவ சபையின் மூப்பர்கள், ரோமாபுரியை தனது தலைமை மையமாக கொன்டு, பின்னாட்களில் அரசியலிலும் தங்களது ஆதிக்கத்தை காட்ட துவங்கினர்.
ரோமாபுரியில் இருந்த தலைமை பிஷப் தன்னை போப்பு என்று கூறிக்கொன்டு, அரசியல் அமைப்பையும், ஆன்மீகத்தையும் ஒருங்கே நிர்வாகிக்க தொடங்கினார்.
(ஆதாரம்:- சமூக அறிவியல் 9ம் வகுப்பு சமச்சீர் கல்வியான்டு 2011-12, போப்பான்டவார் எழுச்சி, பக் 33)
.
உலகம் முழுவதுமான அவரது ஆதிக்கம் கிறிஸ்துவுக்கு பின்னர் முதலாம் நூற்றான்டிலேயே நடைமுறைக்கு வந்திருந்தது.
கிபி 538ல் ஆம் வருடத்தில் உலகின் ஏகபோக ஆட்சியாளராக போப்பானவர் அனைத்து உலகநாடுகளால் அங்கிகரிக்கப்பட்டு இருந்தார்..
1260 வருடங்கள் ஆட்சி புரிந்திரிந்த அவரது அரசானது, உலக வரலாற்றின் மறக்க இயாலாததும், மறக்க கூடாததுமான கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டு இருந்தது.
"உலகலாவிய சபை" எனப்பட்ட கிறிஸ்தவ சபையின் கட்டுபாடுகளுக்கு பனியும்படி உலகநாடுகள் அனைத்தையும் பனித்தார்.
பனியாதவர்களை அழித்தார்.
.
""தன்டனை மன்றங்களை ஏற்படுத்தி அவரது ஆட்சியானது, தனது எதிர்ப்பாளர்களை கொன்று குவித்தது.
( ஆதாரம்:- சமூக அறிவியல் 9ம் வகுப்பு சமச்சீர் கல்வியான்டு 2011-12, இன்குசசின் ( விசாரனை நீதிமன்றம்)பக்கம் 53
"""
.
கத்தோலிக்க சபை என்று அழைக்கப்பட்ட இந்த உலகளாவிய சபை தனது சரித்திரத்தில் ரத்தம் படிந்த செங்கோலாகவே தன்னை உலகிற்கு அடையாளம் காட்டியிருந்தது.
ஆயினும், வல்லவனுக்கு வல்லவனையும் உண்டு பன்னும் பராக்கிரமுள்ள தேவன் கிபி 1798ம் ஆன்டில் அப்போதிருந்த போப்புவாகிய ஆறாம் பயஸ் (Pius vi) என்பவரை அவரது சிங்காசனத்தை விட்டு கீழிறக்கினார்.
பிரெஞ்ச் நாட்டின் சர்வதிகாரியாக இருந்த நெப்போலியனின் கட்டளையின் பேரில் அவனது படைத்தலைவனாகிய பெர்தியர் என்பவன் போப்புவை கைது செய்து சிறையில் அடைத்தான்.
அந்த போப்பு தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை சிறையிலேயே கழிக்க நேர்ந்தது.
உலக சரித்திரத்தில் மாபெரும் மாறுதல் உன்டாகியது.
.
தொடரும்.......
Comments
Post a Comment