இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

"""இப்பொழுது புரிகின்றதா"""
.
பாடம் :2
ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்!
.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள் 
.
உண்மை :-4 அதை கேட்க முடியும்.
31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். 
மத்தேயு 24:31

.
எக்காளம் தொனிக்கும்!  அந்த சத்தம் கல்லறைகளை உடைக்க கூடியதாக இருக்கும்!
.
16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 
1 தெசலோனிக்கேயர் 4:16

17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 
1 தெசலோனிக்கேயர் 4:17

.
கிறிஸ்து வரும்போது நாம் அவரை சந்திக்கதக்கதாக அவரோடு ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்படும் நாள் எத்தனை அருமையானது.
மேலும் நாம் நம்முடைய அன்பர்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டு இனி ஒருபோதும் பிரியாது,  நித்திய நெடுகிலும் தேவனால் நமக்காக ஆயத்தப்படுத்த பட்டுள்ள அந்த மகிமை பொருந்திய பேரின்ப வீட்டில் தங்கியிருப்போம்.
.
கிறிஸ்துவின் எச்சரிக்கைக்கு சற்றே செவிகொடுப்போமாக.
"" இதோ அறைவீட்டிற்குள் இருக்கிறார்""
என அவர்கள் கூறுவார்களேயானால்?
இந்த நாட்களில் இந்த தவறான போதனை வளர்ந்துவருகிறது.
மேலும் தேவனுடைய பிள்ளைகள் ரகசியமாக எடுத்துகொள்ளப்படுவார்கள் என்ற போதனையும் பரவலாக உபதேசிக்கபடுகிறது.
.
சற்று முன்பு நாம் வாசித்த இரண்டு வசனங்களும் தேவனுடைய பிள்ளைகள் ஆகாயத்தில் எடுத்துகொள்ளபடுதலை குறிக்கிறது.
""மனுசகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்""
""வானத்தில் மேகங்கள் மேல்" வரும்போது,
" அதை கண்டு" 
"சகல கோத்திரத்தாரும் புலம்புவார்கள் ""
கர்த்தர் ""ஆரவாரமிடுவார்"",
பிரதான தூதன் " சத்தமிடுவான்"
தேவதூதர்கள் "" எக்காளங்களை முழங்குவார்கள்""
இதை கேட்டு கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்தெழுந்து, தேவனுடைய பிள்ளைகளோடே ஆகாயத்தில் எடுத்துகொள்ளப்படுகிறார்கள்.
இவையாவும் ரகசியமாக நடக்ககூடியதா?
நிச்சயமாகவே இல்லவே இல்லை.

.
இரகசிய வருகை என்ற கொள்கை மிகவும் ஆபத்தான ஒரு உபதேசமாகும்.
ஏனெனில் அது ஜனங்களை ஒரு மாயையான பாதுகாப்பிற்குள் முடக்கி வைத்திருக்கிறது.
மேலும் அது கிறிஸ்துவின் முதலாம் வருகையில் கோடிக்கனக்கான ஜனங்களை வஞ்சகத்திற்கு உட்படுத்திய உபதேசத்திற்கு இனையான வஞ்சக உபதேசமாகும்.
கேட்பதற்கு இதமாகவும், இனிமையாக இருந்தாலும் ""இரகசிய வருகை"" என்ற உபதேசம் வேத அடிப்படை இல்லாதது என்பதை நாம் கண்டு கொள்ள வேண்டும்.
.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று