இன்றைக்கு அற்புதங்கள் செய்யக் கூடிய தேவனுடைய வல்லமை குறைந்து போய்விட்டதா?

*இன்றைக்கு  அற்புதங்கள் செய்யக் கூடிய தேவனுடைய வல்லமை குறைந்து போய்விட்டதா?* 

நீங்கள் உங்களுடைய வேதாகமத்தில்  தேவனுடைய வல்லமைகளை வாசித்து  தியானித்து பார்த்து இருக்கிறீர்களா?

இன்றைக்கு அற்புதங்களை பெற்று கொள்ள வாருங்கள் என்று  அநேக கூட்டங்களில்  அழைக்கிறார்கள் அற்புதங்களை பார்ப்பதற்கும் பெற்று கொள்வதற்கும் பெரும் கூட்டமே   போகிறது ஆனால் அவர்கள் சொன்னது போல நடக்கிறதா?

வேதாகமத்தில் அற்புதங்கள் எப்படி பதிவு செய்யப் பட்டு  இருக்கிறது? 

*தேவன்  இயேசு கிறிஸ்துவைக் கொண்டு செய்த அற்புதங்களை கவனித்து பாருங்கள்* 

1. *பிறவி குருடரை சுகமாக்கினது* (மத் 9:27-29)
2. *மரித்தோரை உயிரோடு எழுப்பியது* (லாசருவை 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு எழுப்பியது) மத் 9:18-25,யோவா 11:1-45,மாற் 5:35-43
3. *கொடிய திமிர்வாதக்காரன் சொஸ்தமானது* (மத் 8:8,4-13, 9:1-7)
4.குஷ்டரோகிகள் சுகமானது (மத் 8:1-4)
5. *கிறிஸ்து காற்றையும் கடலையும் அதட்டி அமைதல் படித்தியது* (மத் 8:23-27)
6. *சூம்பின கையையுடைய மனுஷனை சுகமாக்கினது* (மத் 12:23-27)
7. *குருடும் ஊமையுமானவனை சொஸ்தமாகினது* (மத் 12:22)
8. *5 அப்பம் 2 மீன்களை கொண்டு ஏறக்குறைய 5000 புருஷர்களை* (பெண்கள் மற்றும் குழந்தைகள் கணக்கில் ஏற்றப்படவில்லை) *போஷித்தது*

கிறிஸ்து இன்னும் எவ்வளவு அற்புதங்களை செய்தார் என்று பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்

பதிவு செய்ய படாத அற்புதங்கள் இன்னும் இருக்கிறது 

*அப்போஸ்தலர்கள் செய்த அற்புதங்களை இன்றைக்கு  யாராவது செய்ய முடியுமா?*
1. *தாயின் வயிற்றிலிருந்து சாப்பாணியாய் பிறந்த ஒரு மனுஷனை பேதுருவும் யோவானும் சொஸ்தமாக்கினது* (அப் 3: 1-10)
2. *பேதுரு தபீத்தாளை உயிரோடு எழுப்பியது* (அப் 9:35-43)
3. *பவுல் மாடியிலிருந்து விழுந்த ஐந்திகு என்ற வாலிபனை உயிரோடு எழுப்பியது* (அப் 20:8-12)

இன்னும் அநேக அற்புதங்களும் அடையாளங்களும் இருக்கிறது 

இப்படி இயேசு கிறிஸ்துவினாலும்  அப்போஸ்தலர்களாலும்  செய்யப்பட்ட அற்புதங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியினவரைக்கொண்டு செய்யப்பட்டது 

 *இன்றைக்கு அநேகர் தங்களுக்கு தேவன் இப்படிப்பட்ட அற்புத வல்லமையை எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று சொல்லக்கூடியவர்கள் செய்யக்கூடிய அற்புதங்களை கவனித்து பார்த்து இருக்கிறீர்களா?*
1. தலை வலி சரியானது 
2. கைகால் வலி சரியானது
3. காய்ச்சல் சரியானது
4. கட்டி சரியானது
5. பிசாசு ஒடினது (இது இன்றைக்கு இந்து கோவில்களில் உள்ள பூசாரிகள் செய்கிறார்கள், மசூதிகளிலும் இதை செய்கிறார்கள்)
6. காது கொஞ்சம் கேட்குது 
7. கொஞ்சம் என்னால் நடக்க முடிகிறது
8. பில்லிய சூன்ய கட்டிலிருந்து விடுதலை (இன்றைக்கு அநேக மந்திரவாதிகள் இதை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்)
9) ஜனங்களை கீழே விழ வைப்பது கதற வைப்பது அழ வைப்பது ஆட வைப்பது இது எல்லாம் வல்லமை என்கிறார்கள்  

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே இவர்களுக்கு  தேவன் அற்புத வல்லமை கொடுத்திருந்தால் ஏன் கிறிஸ்துவைப் போலும் அவருடைய அப்போஸ்தலர்களைப் போலும் தீர்க்கதரிசிகளைப்போலும் *இவர்களால் அற்புதங்கள் செய்ய முடியவில்லை, இவர்கள் எல்லாம் கள்ளக் கிறிஸ்துக்கள்  கள்ளப் போதகர்கள் இவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்*

*கொஞ்சம் நீங்கள் சிந்தித்து பாருங்கள் இன்றைக்கு எத்தனை கீழ் கண்ட அற்புதங்கள் நடக்கிறது*
1. மரித்தோரை உயிரோடு எழுப்புவது
2. பிறவிக் குருடர்களை குணமாக்குவது
3. குஷ்டரோகிகளை குணமாக்குவது
4. தாயின் வயிற்றில் இருந்த பிறந்த சப்பாணிகளையும்.     முடவர்களையும் குணமாக்குவது
5. குருடும் ஊமையுமானவனை குணமாக்குவது
6. மாடியில் இருந்த விழுந்த ஐத்திகுவை (விபத்து) பவுல் உயிரோடு எழுப்ப முடிந்தது என்றால் விபத்தில் பலியானவர்களை உயிரோடு எழுப்பவும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு அற்புத சுகம் கொடுத்து மறுபடியும் அந்த உறுப்புகளை சுகப்படுத்தவும் இன்றைக்கு இருக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பெயரை வைத்துக் கொணடு அற்புதம் செய்கிறோம் என்று சொல்லக் கூடிய இவர்களால் ஏன்  முடிவதில்லை.

*கிறிஸ்து ஏன் அற்புதங்களை செய்தார்?*
*கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்தார்* என்பதற்கும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் பிதாவுடையது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது
Joh 3:2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, *நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்,* ஏனெனில் *ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்* என்றான்.

*கிறிஸ்து அற்புதங்கள் செய்த போது அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதை அவர்கள் கண்டு விசுவாசித்தார்கள்*
Joh 2:11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, *தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் 
அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.*

*இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களின் நோக்கம் என்ன?*
Joh 20:30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத *வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.*
Joh 20:31 *இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும்,* இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

*அப்போஸ்தலர்கள் ஏன் அற்புதங்களை செய்தார்கள்?* 
அவர்கள் தேவனாலும் இயேசு கிறிஸ்துவினாலும் அனுப்பப்பட்டவர்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது
Mar 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். *கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.* ஆமென்.

*அப்போஸ்தலர்களுடைய  அற்புதங்கள் எல்லாம் அவர்களுடைய சத்துருக்களே இது பொய் என்று சொல்ல முடியாது அளவுக்கு இருந்தது*
Act 4:16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? *எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.*

வேதம் எபிரெய ஆசிரியரைக் கொண்டு  தேவனுடைய வார்த்தைகளுக்கு தேவன் சாட்சி எப்படி கொடுத்தார் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்* 
Heb 2:3 முதலாவது *கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,*
Heb 2:4 *அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து* நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

*தேவன் நம்முடைய பெரிதான இரட்சிப்புக்காக அடையாளங்கள், அற்புதஙகள், பலவிதமான பலத்த செய்கைகள், பரிசுத்த ஆவியின் வரங்களினாலும்  சாட்சி கொடுத்து முடித்து விட்டார் என்று இந்த வசனங்கள் நமக்கு போதிக்கிறது* 

*இன்னும் நாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு அற்புதங்களை சாட்சியாக தேடிக் கொண்டு இருப்போமானால் நாம் பொல்லாத சந்ததியாராய்  இருப்போம்*
Luk 11:29 ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: *இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்*; ,,,,,,,,,,,,

*இதை எப்போதும் உங்கள்  மனதிலே வைத்து கொள்ளுங்கள்*
உபா 13:1உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 
உபா 13:2நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, *உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்*, 
உபா 13:3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக, *உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.* 
உபா13:4 நீங்கள் *உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.* 
.
ஆமென்!!!

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று