இப்பொழுது புரிகின்றதா
.
பாடம் :2
ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்!
.
அடுத்து தேவனுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கபடுவதற்கான மேடை ஆயத்தமாக்கப்பட்டு விட்டது.
.
44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
தானியேல் 2:44
45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
தானியேல் 2:45
.
""
அந்த ராஜாக்களின் (ராஜ்ஜியங்களின்) நாட்களில் தேவன் தமது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க போவதாக கூறுகிறார்.
அந்த ராஜ்ஜியம் என்றென்றைக்கும் நிற்கும்.
அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறிவிட்டது.
அடுத்து ஸ்தாப்பிக்கபட வேண்டிய உலக அரசு தேவனுடையது தான்.
.
""""1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின, சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 21:1
2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:2
3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:3
4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:5
""""
.
இந்த வாக்குதத்தம் நிறைவேற நாம் எதிர்பார்த்து கொன்டிருக்கும் போது, மீண்டும் வருவேன் என்ற இயேசுகிறிஸ்துவின் வாக்குதத்தம் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.
""""""1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
யோவான் 14:1
2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14:2
3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
யோவான் 14:3
""""""
.
அவருடைய வருகையை பற்றிய காரியத்தை குறித்து நீங்கள் சிந்திப்பதை பிசாசானவன் விரும்பவில்லை.
கிறிஸ்துவின் முதலாம் வருகையில் ஜனங்களை மிகத்திறமையாக ஏமாற்றினான் என்பது உண்மையானால்,
அவருடைய இரண்டாம் வருகையை குறித்து இன்னும் கடுமையான பிரயாசத்தோடு ஜனங்களை வஞ்சிப்பான் என்பது எத்தனை உண்மை.
அதை இயேசு முன்னறிந்தவராகவும் மேலும் அவர் நம்மேல் வைத்துள்ள மிகுந்த அன்பினாலும் தம்முடைய இரண்டாம் வருகையை குறித்து அவன் எப்படிப்பட்ட இரண்டு வஞ்சனைகளை செய்வான் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
.
"""24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24:24
25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
மத்தேயு 24:25
26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
மத்தேயு 24:26
""""
.
முதலாவது வஞ்சகத்தை கவனியுங்கள்.
"" அவர் வனாந்தரத்தில் இருக்கிறார்"
கிறிஸ்து இங்கே இருக்கிறார்.
அங்கே போய் நாம் அவரை கண்டுகொள்ளலாம் என்ற வார்த்தைகளை இந்த நவீன யுகத்தில் தொடர்ந்து கேள்விபடுகிறோம்.
.
இரண்டாம் வஞ்சகம் இன்னும் தந்திரமுள்ளது.
""இதோ அறைவீட்டிற்குள் இருக்கிறார்""
கிறிஸ்துவின் இண்டாம் வருகை பற்றிய மிக முக்கியமான சத்தியத்தை குறித்து,
இயேசு அறைவீட்டிற்குள் இருந்து வருகிறாரென ஜனங்கள் பேசுகிறார்கள்.
கிறிஸ்தவ சபைகளில் இயேசுவின் ""ரகசிய வருகை"" என்ற போதனை பிரபலமாகி கொன்டிருப்பது ஆச்சர்யமாயுள்ளது.
அதை நம்பாதிருங்கள்
.
இந்த காரியத்தில் நீங்கள் வஞ்சிக்காதபடிக்கு உங்களை காத்து கொள்ளமுடியுமா?
.
கிறிஸ்து எப்படி வருவார் என்ற கேள்விக்கு வேதாகமம் ஐந்து தெளிவான உண்மைகளை கொடுக்கிறது.
இந்த ஐந்து வேத உண்மைகளை நாம் நன்கு அறிந்திருந்தால் நம்மை எவரும் வஞ்சிக்கமுடியாது.
.
Comments
Post a Comment