ரோமன் கத்தோலிக்க சபை அறிமுகப்படுத்திய வேதத்துக்குப் புறம்பான சடங்காச்சாரங்கள் கீழே .

ரோமன் கத்தோலிக்க சபை அறிமுகப்படுத்திய வேதத்துக்குப் புறம்பான சடங்காச்சாரங்கள் கீழே
.

கி.பி. 300 - மரித்தோருக்காக ஜெபிக்கும் பழக்கம்  - 
.

கி.பி. 305 - சிலுவை போடும் பழக்கம்  
.
கி.பி. 323  ல் 7-ம் நாள் ஒய்வு நாளுக்கு பதிலாக ஞாயிறு ஆராதனை கொண்டுவரப்பட்டது.
.
கி.பி. 375 - புனிதர்களை ஆராதிக்கும் பழக்கம் 
.
கி.பி. 394 - திருப்பலி ஆராதனை 
கி.பி. 431 - மரியாள் வணக்கம் ஆரம்பித்தல் 
.
கி.பி. 500 - குருக்கள் வித்தியாசமாக ஆடம்பர ஆடை அணியும் பழக்கம் 
.
கி.பி. 526 - மரிக்கும்முன் அவஸ்தை பூசுதல் கொடுப்பது 
.
கி.பி. 600 - லத்தீன் மொழியில் ஆராதனை & மரியாளை நோக்கி ஜெபிக்க அனுமதி வழங்கப்படுதல்.
.
கி.பி. 786 - சிலை வணக்கம் (அ) உருவ வழிபாடு அனுமதிக்கப்படல்
.
கி.பி. 1079 - சபை குருக்கள் திருமணம் செய்யக்கூடாது என அறிவித்தல்
.
கி.பி.1854 - மரியாளுடைய அமலோற்பவம் பிரகடனப்படுத்தப்படுதல் 
.
கி.பி. 1090 - ஜெபமாலை சொல்லும் பழக்கம் ஆரம்பித்தல்
.
கி.பி. 1220 - நற்கருணை வழிபாடு 
.
கி.பி. 1229 - வேத வாசிப்பு தடை செய்யப்படுதல்
.
கி.பி. 1439 - உத்தரிக்கிற ஸ்தலம் அங்கீகரிக்கப்படுதல் - கல்லறை திருவிழா 
.
கி.பி. 1549 - தள்ளுபடி ஆகமங்களை வேதத்தில் சேர்த்தல்
.
கி.பி. 1870 - போப் தவறு செய்ய மாட்டார் என்ற கொள்கை உருவாதல்
.
கி.பி. 1950 - மரியாள் தன் சரீரத்தோடு பரலோகம் சென்றாள் என அறிவித்து ஏற்றுக்கொள்ளப்படல் - (மரியாள் மரித்து ஆத்மா பரலோகத்திலுள்ளதை எடுத்துக்கொள்ளலாம்)
.
கி.பி.1956 - மரியாள் சபையின் தாயாக முடிசூட்டப்படுதல்
.
இது தவிர ....
1. சூரியக் கடவுளின் நாளான 
டிசம்பர் 25 ஐ இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் என அறிவித்தல், 
.
2. கிறிஸ்துமஸ் மரம் (பண்டைய கால மர வழிபாடு, அன்று மணிகள் கட்டுவார்கள், அவை எல்லாம் பொன், வெள்ளி காணிக்கைகளாகும்- இன்று வண்ணத்தில் செயற்கையாயுள்ளது. புறமதத்தார் இன்றும் மத வழிபாடு செய்து வேண்டுதல்களை கட்டி தொங்க விடுகிறார்கள்.. அந்த மரத்தில் இயேசு இருக்கிறாரா?
.
3. குடில் (சாஸ்திரிகள் கண்டு பரிசளித்தது இரண்டு வயசான இயேசுவிற்க்கு - சாஸ்திரிகள் வந்தபோது முன்னணையில் குழந்தை இல்லை - வீட்டில் இருந்தது...  இயேசு குழந்தை அல்ல இராஜாதி ராஜா) - பரிசு பொருட்களை இயேசுவிற்க்கு தர வேண்டும், நம் ஒருவருக்குகொருவர் அல்ல. 

இயேசு பூமியில் இல்லாததால் நாம் யாருக்கு பரிசைத்தர வேண்டும்?

மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 
(மத்தேயு 25:40)
.
4. மெழுகுவத்தி வைத்து ஊதி அணைத்து பிறந்தநாள் கொண்டாடுவது பிசாசுகள் மனித வர்க்கத்தை கொலைசெய்ய கொண்டாடும் வழக்கத்திலிருந்து வந்தது. எத்தனை பேரை கொல்ல வேண்டுமோ அத்தனை மெழுகுவத்தியை வைப்பார்கள். எரிந்துக்கொண்டிருக்கும் மெழுகுவத்திகளை அணைத்து கேக்கை வெட்டுவது மனிதனை வெட்டிக் கொள்வதாகும். விளக்கை எரியச்செய்வதே நல்ல மாண்பு. ஊதி அணைப்பது நல்லதா? 
.
5. சான்டோகிளாஸ் இயேசு பிறந்த செய்தியை இயேசுவை அறியாதவர்களுக்கு சொல்ல வேண்டும்... சான்டோகிளாஸ் வானத்திலிருந்து வந்த தேவ தூதனாக சித்தரிக்கப்படுகிறார்.. தேவ தூதர்கள் இயேசு பிறந்த செய்தியை அறியாத மாடு மேய்ப்பர்களுக்குத்தானே சொன்னார்...? நாமும் இயேசு பிறந்த செய்தியை இயேசுவை அறியாதவர்களுக்குத்தானே சொல்ல வேண்டும் ..? சான்டோகிளாஸ் உடை கோகோ- கோலா கம்பெனி வடிவமைத்தது. சிவப்பு & வெள்ளை அவர்களுடைய விளம்பர நிறம்தான்.. 
.
5.  ஈஸ்டர்.... இது  ‌கி.‌பி. 29ஆ‌ம் ஆ‌ண்டி‌லிரு‌ந்து ஈ‌ஸ்ட‌ர் ப‌ண்டிகை கொ‌ண்டாட‌ப்படுவதாக வரலாறு கூறுகிறது. ரோம இ‌திகாச‌ங்க‌ளி‌ல் ஈ‌ஸ்ட‌ர் எ‌ன்ற பெ‌ண் கடவு‌ள் ‌விடியலு‌க்கான தேவதையாக ‌சி‌த்த‌ரி‌க்க‌ப்படு‌கிறா‌ர். 

என பாபிலோனிய வழிபாட்டு முறைகள் பல சபைக்குள் அறிமுகப்படுத்துதல்.
.

ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்."
(வெளி. விசேஷம்  2:20)

இதில் ஏதாவது (அ) முழுவதும்  நானும் என் சபையும் கடைபிடிக்கிறதா?

அவளை ( சபை ) விட்டு வெளியே வாருங்கள்

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று