கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' .
"கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே'
.
அத்தியாயம் :-2
உன்னை ரட்சிப்பது கிருபையா?
கட்டளையா?
.
ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
கிறிஸ்து + சபை= (
நீங்கள்,நான்,விசுவாசிகள்.)
.
இப்போது கட்டளை என்னை பாவி என்று சொல்லமுடியாது. ஏன்?
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது மனிதன்.
ஆதாமை போல் புதிய மனிதன்.
புதிய சிருஷ்டி.
புதிய மனிதனாகிய அவனுக்குள் பாவம் இல்லாதபோது, கற்பனை அவனை ஆளுகை செய்யமுடியாது.
.
ஒருவன் பணம் எடுக்க வேண்டுமென்றால், இயல்பாகவே வங்கி (bank) அல்லது Atm க்கு போகிறான்.
அவன் ரேஷன் கடைக்கு போவதில்லை.
.
வாகனங்கள் ஓட்டும்போது இயல்பாகவே இடதுபக்கம் ஓட்டுகிறோம்.
வலது பக்கம் ஓட்டுவதில்லை.
இது நம் இருதயங்களில் பதிந்து இருக்கிறது.
பழகிவிட்டது.
.
அது போலவே நீதியின் வசனத்தில் படிக்கப்பட்டுவிட்டால் அது நமக்கு பாரம் கிடையாது.
பிரியமானவர்களே, தன்னிச்சையாகவோ அல்லது இயல்பாகவே நாம் இறைவனின் வழிகளை பின்பற்றி நடக்கிறவர்களாக நம் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும்.
.
4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4
.
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
.
8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
.
9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 3:9
.
10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
1 யோவான் 3:10
.
6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1 யோவான் 3:6
.
19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார். அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.
1 சாமுவேல் 6:19
20 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
1 சாமுவேல் 6:20
""
பிரியமானவர்களே பெட்டிக்குள் எட்டிபார்த்ததுக்கே 57,000பேர் அடிக்கபட்டார்கள்.
அதை எடுத்து பார்த்து வாழாத நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?""
.
12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள், எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
ரோமர் 2:12
.
15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
1 யோவான் 2:15
.
தப்பித்துகொள்ளலாம் என்று சாக்குபோக்கு சொல்லி, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருந்துவிடாதீர்கள்.
உங்களையே நீங்கள் ஏமாற்றிகொள்ளாதீர்கள்.
19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
.
19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது, அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
வெளிப்படுத்தின விசேஷம் 11:19
.
12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:12
.
Comments
Post a Comment