என் அன்பின்,, வாலிப பிள்ளைகள் கவனத்திற்கு, #பெருகிவரும் ஓநாய்களின் கள்ள உபதேசம்.
என் அன்பின்,,
வாலிப பிள்ளைகள் கவனத்திற்கு, #பெருகிவரும் ஓநாய்களின் கள்ள உபதேசம்.
இந்த சில வேத மாணாக்கர்கள் மற்றும் யேகோவா சாட்சிகள் எப்படி தேவனுடைய திரித்துவத்தை ஏற்றுக்கொள்கிறதில்லையோ அதே போல இவர்களுடைய கள்ள உபதேசத்தத்திற்கு ஒத்துவராத எந்த சத்தியத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்கிறதில்லை. இவர்களுடைய கள்ள உபதேச கொள்கைகளில் சிலவற்றை கீழே காணலாம்.
#எல்லோருக்கும் மீட்பு உண்டு.
உலக மனிதர் அனைவருக்கும், அவர்கள் எப்படி இருந்தாலும், யாராயிருந்தாலும், யாரை பின்பற்றினாலும், என்னதான் துன்மார்க்கமாய் வாழ்ந்தாலும், அனைவருக்கும் ஒருசேர மீட்பு உண்டு என்கிறார்கள். அதற்கு இவர்கள் காண்பிக்கும் உதாரணம்:-
இயேசு உலக இரட்சகர் என்பதால் உலக மக்கள் அனைவருடைய பாவத்தையும் ஒரேதரம் தம்முடைய பலியினால் பரிகரித்துவிட்டார்; மனிதனின் ஜென்ம பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே; நரகம் என்பதெல்லாம் கிடையாது; கல்லறைக்குழியே பாதாளம் எனப்படுகிறது; இறுதி நாளில் கிறித்துவைப் போலவே பரிசுத்தமாக வாழ்ந்தோருக்கான மீட்பில் முதல் கூட்டம் (ஈசாக்கின் ஒப்பீடான கிறித்தவர்) இடம்பெறும்; அவர்களே ஆட்சியாளர்கள்; அடுத்து கைவிடப்பட்டோருக்கு ( யூதர் அல்லது இஸ்ரவேலர்) ஒரு வாய்ப்பு; இறுதியில் ஆயிரம் வருட அரசாட்சியின்போது உலகத்தார் அனைவருமே ஒருசேர மீட்கப்பட இந்த உலகமே பரலோகமாக மாறும். இதுவே ஆபிரகாமின் மூன்று மனைவியரின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறும் பாடமாகும் என கூறுகிறார்கள்.
முதல் மனைவியான சாராளின் மகனான ஈசாக்கின் வாக்குதத்த சந்ததிக்கு கிறித்துவர்கள் ஒப்பீடாம்; இரண்டாம் மனைவி(?)யான ஆகாரின் சந்ததியார் கிறித்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாம்; மூன்றாவது மனைவியான கேத்துராளின் சந்ததியார் ஒரு பாவமும் அறியாத உலகத்தாராம்; இந்த மூன்று கூட்டத்தையும் மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு திட்டத்தின் மூலம் ஆண்டவர் மீட்டுக்கொண்டு இந்த உலகையே பரலோகமாக மாற்றிவிடுவாராம் என்பதுதான் இவர்கள் உபதேசம்.
இந்த கருத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. காரணம் ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சரித்திர சம்பவம். இதிலிருந்து வேதம் விவரிக்காத ஒரு கருத்தை, அல்லது வேறு எங்குமே இணைவசனம் இல்லாத ஒரு கருத்தை இவர்கள் திரிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே மீட்பு என்கிற சத்தியத்தை இதன்முலம் மறுதலிக்கின்றனர்.
#அனைவருக்கும்_மீட்பு என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காண்பிக்கும் வேத வசனங்கள்:-
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ஏசாயா 11:9.சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே
வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இயேசுவை விசுவாசித்து தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே மீட்பு அல்லது இரட்சிப்பு என்பதற்கு நாம் வேதத்திலிருந்து பல வசனங்களை ஆதாரமாக பெற முடியும்.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான ”குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (விசுவாசிக்கிறவனுக்கு மட்டுமே நித்தியஜீவன்)
ரோமர் 10:9-10 என்னவென்றால், கர்த்தராகிய ”இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”. நீதியுண்டாக இருதயத்திலே ”விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”
யோவான் 1:12 “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”
எபேசியர் 2:8-9 “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” (விசுவாசித்தால் தான் இரட்சிப்பு)
அப்போஸ்தலர்.16:31 “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ” (இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்யவேண்டும் என பயத்துடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் இது)
எபி 11:7 “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். (எச்சரிப்பை கேட்டு, அதை விசுவாசித்து, பயபத்தியுடன் இரட்சிப்புக்கேற்ற கிரியையை ஆரம்பிக்கவேண்டும்)
#உலக_மனிதர்_அனைவருக்கும், அவர்கள் எப்படி இருந்தாலும், யாரை பின்பற்றினாலும், என்னதான் துன்மார்க்கமாய் வாழ்ந்தாலும், அனைவருக்கும் ஒருசேர மீட்பு உண்டு என்றால் பவுலும் இயேசுக்கிறிஸ்துவின் சீடர்களும் இன்றும் எத்தனையோ மிஷனரிகளும் ஏன் சுவிசேஷத்திற்காய் இரத்தசாட்சியாய் மரிக்கவேண்டும். இந்த கள்ள உபதேசத்தின்முலம் யாருக்கும் சுவிசேஷம் சொல்ல அவசியமில்லை எல்லோருக்கும் மீட்பு உண்டு என்று சொல்லி சுவிசேஷத்திற்க்கு எதிராய் சாத்தான் எடுக்கும் முயற்சியாகும்.
நரகமும் இல்லை பாவத்திற்கு தண்டனையும் இல்லை
இவர்கள் நரகம் என்பதே இல்லை என்றும், அன்பு மிகுந்த தேவன் யாரையும் நரகத்தில் தள்ளுவதில்லை. அனைவருக்கும் மீட்பு என்பது இயேசுக்கிறிஸ்துவின் ஈடுபலியின் மூலம் உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் நரகத்தைக் குறித்து, “அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் (வெளி 21:8)” என்றும் “அக்கினிக்கடல் (வெளி 19:20)” என்றும் “நித்திய அக்கினி (மத் 25:41)” என்றும் “அவியாத அக்கினியுள்ள இடம் (மாற் 9:43,45) ” என்றும் அக்கினிச் சூளை (மத் 13:42) என்றும் “பாதாளம் (லூக் 16:23)” என்றும் “சதா காலங்களிலும் வாதிக்கப்படும் இடம் (வெளி 20:10)” என்றும் “அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த இடம் (மத் 25:30)” என்றும் “புறம்பான இருள் (மத் 8:12)” என்றும் “வேதனைப்படும் இடம் (லூக் 16:24)” என்றும் “மனுஷருக்கு இளைப்பாறுதலில்லாத இடம் (வெளி 14:11)” என்றும் “நித்திய ஆக்கினை (மத் 25:46)” என்றும் “நித்திய அழிவு (I தெச 1:10)” என்றும் “காரிருள் (யூதா 1:13)” என்றும் இன்னும் பலவாறாக வேதம் நரகத்தைக் குறித்துப் பேசுகின்றது.
இப்படி பரிசுத்த வேதாகமம் நரகத்தைக் குறித்து சொன்னாலும் இந்த கள்ள உபதேச கூட்டத்தார் நரகம் என்பது கல்லறையையும் மனிதனுடைய மரணத்தையும் மட்டும்தான் குறிக்கின்றது என்று சொல்லி தங்களுக்கு சாதகமாக #வேதத்தை_புரட்டுகிறார்கள். இவர்கள் பொதுவாக இவர்களுடைய கள்ள உபதேசத்தத்திற்கு ஒத்துவராத எந்த வசனத்தையும் “தீர்க்கதரிசனம்” அல்லது “உவமை” அல்லது “மூல மொழியில் இப்படி இல்லை” என்று சொல்லி அதன் நேரடி அர்த்தத்தை மூடி மறைப்பதில் கில்லாடிகள்.
தேவன் மனிதனுக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுக்கின்றார் என்பதும், எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்பதும் உண்மையாயினும் அந்த இரட்சிப்பை ஒவ்வொரு மனிதனும் சுதந்தரித்துக்கொள்ள வேண்டியது அவனுடைய கடமையாகும். இதற்க்காகவே சபை சுவிசேஷப்பணியை செய்துவருகின்றது. ஒரு ஊரில் உள்ள எல்லா ஜனங்களுக்கு ஒரு கொடிய நோய் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அங்குள்ள அரசாங்கம் இதற்கு தீர்வாக பாதிக்கப்பட்ட எல்லாரும் குணமடைய தடுப்பூசியையும் மருந்தையும் இலவசமாக கொடுக்கின்றது. இலவசமாக கொடுக்கப்பட்டுவிட்டது என்பதற்க்காக எல்லோருக்கும் அந்த நோய் குணமாகிவிடாது. அந்த மருந்தையும் தடுப்பூசியையும் நாம் வாங்கி பயன்படுத்தும்போதுதான் அந்த நோய் குணமாகும்.
இரட்சிக்கப்படாதவர்களுக்கு தண்டனையாக நரக #ஆக்கினை_உறுதி என தெரிவிக்கும் வசனங்கள்:-
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
நீதிமொழிகள் 9:18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
லூக் 12:5 நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
யாக்கோபு 3:6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
மத்தேயு 9:12: ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
மத்தேயு 25:41: அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
மத்தேயு 25:46: அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்
இந்த வசனங்களின்படி பாவத்தில் நிலைத்திருப்பவர்கள் நித்திய ஆக்கினையாகிய நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள் என்பதை வேதம் இங்கே தெளிவுபடுத்தியுள்ளது.
#பாவத்திற்கு தண்டனை இல்லை என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காண்பிக்கும் வேத வசனம்.
அப் 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இந்த வசனத்தின் அடிப்படையில் தேவனை அறியாதவர்கள் செய்கின்ற பாவத்திற்கு தண்டனை இல்லை என்று போதிக்கிறார்கள். ஆனால் அந்த வசனம் அத்தோடு முடிந்துவிடவில்லை. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். இப்பொழுது எல்லா மனிதர்களும் மனந்திரும்பவேண்டுமென்று தேவன் கட்டளையிடுகிறார் என்கிற வார்தையை மறைத்துவிடுவார்கள். பாவத்திற்கு தண்டனை இல்லை என்றால் பவுல் நியாயத்தீர்ப்பு குறித்து சொல்லும்போது பேலிக்ஸ் ஏன் பயப்படவேண்டும் அப் 24:25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
#பாவத்திற்கு தண்டனை உண்டு என தெரிவிக்கும் வேத வசனங்கள்:-
யூதா 1:14,15 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
II தெச 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
II தெச 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
மத் 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத் 10:15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பிரசங்கி 3:17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
எபிரெயர் 2:4. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
1பேது 4:5. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
1பேது 4:17. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
2பேது 2:9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
எபி 4:13. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
வெளி 11:18. ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
இயேசுக்கிறிஸ்து மாம்சத்தில் #உயிர்த்தெழவில்லை.
இயேசுக்கிறிஸ்துவின் மாம்ச உயிர்தெழுதலை இவர்கள் மறுதலிப்பார்க்ள். அவர் சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என சாதிப்பர்கள். அப்படியானால் அவர் சரீரம் என்னவாயிற்று, அவர் சரீரத்தை தேடிச்சென்ற பெண்களும் சீஷர்களும், அவர் சரீரத்தை காணவில்லையே என கேட்டால், மோசேயின் சரீரத்திற்கு என்னவாயிற்றோ, அதுதான் இயேசுவின் சரீரத்திற்கும் நடந்தது என்பார்கள். அதற்கு ஆதாரமான வசனம் கேட்டால் அவர்களால் கொடுக்க இயலாது. இயேசுக்கிறிஸ்து மாம்சத்தில் உயித்தெழவில்லை என கூற அவர்கள் உபயோகிக்கும் வசனங்கள்:-
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
I கொரிந்தியர் 15:50. சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
அவர் மாம்சத்தில் கொலையுண்டபோது அவரது ஆவி உயிரோடிருந்தது என 1 பேதுரு 3:19 கூறுகிறது. பின்பு மூன்றாம் நாளில் தான் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார். அதுபோல தான், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டாது என கூறுகிற பவுலடிகள் அடுத்த வசனத்தில் அதை தெளிவு படுத்துகிறார். 1 கொரி. 15:51,52 வசனங்களில், (இயேசு மறுரூபமலையில் மகிமையின் சரீரத்திற்குள்ளாக மறுரூபமானதுபோல) நாமும் மறுரூபமாவோம் என கூறுகிறாரே.
மாம்ச உயிர்த்தெழுதல் மற்றும் மறுரூபமாக்கப்படுதலுக்கு ஆதாரமான வசனங்கள்: –
யோவான் 20:14 to 21:25; மத்தேயு 28:9-17; மாற்கு 16:9-16; லூக்கா 24 ம் அதிகாரம்; யோவான் 20:14 – 21:25 அதிகாரங்கள் முழுக்க முழுக்க இயேசு மாம்சத்தில் உயிர்த்தெழுந்ததையே திட சாட்சியாக அறிவிக்கின்றன.
லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
லூக்கா 24:40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்தேயு 28:9. ”அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்” என்றும் வேதம் கூறுகிறது. ஆவியாயிருந்திருந்தால் பாதங்களை எப்படி தழுவமுடியும்!
மேலும் அப். 2: 31. இன் படி “அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.” என்று பேதுரு கூறுகிறாரே!
இயேசு பூட்டிய அறைக்குள் எப்படி பிரவேசித்தார் என கேட்கிறார்கள். அவர் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தோடுதான் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு அறைக்குள் ஊடுருவிச்செல்லும் தன்மையும் இருந்தது, அதே நேரத்தில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இருக்கிறதா எனக் கேட்டு புசிக்கும் தன்மையும் இருந்தது.
சபை கூடிவருதல் மற்றும் காணிக்கையை குறித்து:
இவர்கள் இன்று இருக்கும் ஒட்டுமொத்த சபை அமைப்பையுமே பாபிலோனிய வேசி சபை என்பார்கள். தசமபாகம், காணிக்கை என்பதெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் யாரும் யாருக்கும் காணிக்கை செலுத்த தேவையில்லை என்பார்கள். ஒட்டுமொத்த சபைத்தலைவர்களையும், ஓநாய்கள் என்றும், கள்ளப்போதகர்கள் என்றும் மிஷனரிகளை விஷ நரிகள் என்றும் தூஷிப்பார்கள். ஆதி அப்போஸ்தலர் மட்டுமே சுவிசேஷம் சொல்ல பணிக்கப்பட்டிருந்தனர் எனவும், அவர்களுக்கு மட்டுமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது எனவும் வேறு யாரும் (பவுல் மட்டும் விதிவிலக்கு என்பார்கள்) சுவிசேஷம் சொல்லவோ, ஜனங்களை நடத்தவோ தேவையில்லை என்பார்கள்.
சபையில் ஐந்துவிதமான ஊழியங்களை ஆண்டவர் வைத்துள்ளார் என வேதம் தெளிவாக கூறுகிறது.
எபேசியர் 4:11. ”மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், 13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். 14. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
15. அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்”.
மேற்கண்ட வசன்ங்களில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைய சபையையும் சபை ஊழியங்களையும் ஆண்டவரே ஏற்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கிறோம். ஆனால் மக்கள் சபை அமைப்பிலிருந்து சிதறடிக்கப்பட்டால் என்னவாகும்..? ஒருவருக்கொருவர் தாங்குதலோ, ஜெபித்தலோ இராது. மந்தையில் சேர்ந்திருந்த மாடுகளை பட்சிக்க இயலாத ஒரு சிங்கம், நரியின் சூழ்ச்சியுடன் மாடுகளை சிதறடித்து, பின் ஒவ்வொன்றாக பட்சித்த கதையை நாம் அறிவோம். இன்று பிசாசின் தந்திரமும் அதுதான். எனவேதான் சபைகளில் பிரிவினையின் ஆவியை எழுப்பி மக்களை சிதறடிக்க முயல்கிறான்.
எபிரேயர் 10: 24. ’மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” என்று வேதம் தெளிவாக சொல்கிறதே.
#காணிக்கையை குறித்து:
இவர்கள் பொதுவாக தங்களை பெரிய ஆவிக்குரியவர்களாக காட்டிக்கொள்ளும் இந்த கள்ள உபதேச கூட்டத்தார் தாங்கள் வேலை செய்து அதன் அடிப்படையிலே ஊழியம் செய்வதாகவும் வேதமும் இப்படியே போதிக்கின்றது என்று சொல்லியும் பவுலும் இப்படித்தான் ஊழியம் செய்தார் என்று சொல்லியும் அதற்கு ஆதாரமாக “அப் 20:34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.” என்ற வசனத்தை காண்பிக்கின்றனர். ஆனால் பவுலும் சபைகளில் காணிக்கையை பெற்று கொண்டு ஊழியம் செய்தார் என்பதும் ஊழியர்கள் தங்கள் பூமிக்குரிய வாழ்விற்கென்று செலவழிக்கவேண்டிய முழு நேரத்தையும், கர்த்தருடைய மந்தையை பராமரிக்கும் பணியிலும், ஆத்தும அறுவடையிலும் செலவிடுவதால், அவர்கள் போஷிக்கப்படவேண்டும் என்பதும் கீழ் கண்ட வேத வசனங்களில் நாம் அறியலாம்.
பிலிப்பியர் 4: 16 நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
II கொரி 11:9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
I கொரி 9: 7. எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
8. இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
9. போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
10. நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
11. நாங்கள் உங்களுக்கு ஞான நன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
12. மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம். 13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? 14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்”
காலத்தியர் 6:6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
ரோமர் 12:13. பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
உலக ஆசீர்வாதத்தை எப்படியாவது, எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணி, (ஏமாற்றுதல், வஞ்சித்தல், பில்லிசூனியம், குறி கேட்டல் போன்ற) பல வழிகளில் முயற்சித்து #திருப்தியடையாதவர்கள், காணிக்கை கொடுத்தால் பல மடங்காக திருப்பிக்கிடைக்கும் என்றெண்ணி கொடுக்கிறார்கள் (குருட்டு விசுவாசிகள்).
பண ஆசை கொண்டு, எப்படியாவது யாரையாவது ஏய்த்து பிழைக்கவேண்டும் என்ற நோக்கோடு சில ஊழியர்கள் திட்டங்கள், ஐக்கிய கூடுகை என்ற பெயரில் சிலர் சுவிசேஷத்தை ஆதாயத்தொழிலாக எண்ணி பட்டங்களை கொண்டு ஊழியர் என்ற ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு அவர்களுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களிடம் காணிக்கை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என கூறி, அதை சாக்காக வைத்து, தருணம் பார்த்து சரியான ஊழியர்களையும் குற்றம் சாட்டுவது பிசாசின்(கள்ள ஊழியர்கள்) தந்திரமாகும். போலி மருந்துகள் இருப்பது உண்மைதான், அதற்காக யாராவது, இன்று அனைத்து மருந்து கடைகளும் ஒட்டுமொத்தமாக போலி மருந்தை மட்டுமே விற்கிறார்கள், எனவே யாரும் மருந்து வாங்க வேண்டம் என கூறுவதுபோல தான் இதுவும்.
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற வசனத்தின்படி, கொடுக்கிறவனுக்கு நிச்சயம் பிரதிபலன் உண்டு. இரண்டு காசு போட்ட விதவையைக்குறித்து இயேசு கூறியபோது, ஐயோ இவளை இந்த கோடீஸ்வர குருமார்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என கூறவில்லை மாறாக அவளை அவர் பாராட்டினார். தவறான நோக்கோடு வாங்குவது பாவமே, ஆனால் ஆண்டவர் நாமத்தில், அவருக்கு கொடுக்கவேண்டுமே என்ற உயரிய நோக்கோடு கொடுப்பவர்களை ஆண்டவர் அங்கீகரிக்கிறார்.
பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கப்படும் காணிக்கை ஆண்டவரால் முற்றிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஞான நன்மையை விதைப்பவர்களுக்கு, சரீர நன்மைகளை கொடுக்கவேண்டியது சபை கூடிவருகிறவர்களுடைய கடமையும்கூட. இது பிரதிபலன் எதிர்பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு தலைவன் தன் பெற்றோர், மனைவி மற்றும் மக்களுக்காக உழைக்கிறானோ அது போன்றதுதான் இதுவும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை நிறைவேற்றுவதுபோல, சபையிலும் ஒவ்வொருவரும் தத்தமது பங்கை நிறவேற்றினாலேயே சபை அமைப்பு நிலைத்திருக்கும். சபைக்கு காணிக்கை கொடுக்க்க்கூடாது என சாத்தான் தடைசெய்வதால், சபை அமைப்பை சிதறடிக்க அவன் எடுக்கும் முயற்சி வெளியரங்கமாகிறது.
#எச்சரிக்கை
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (II தீமோ 3:16) என்றும் எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்றும் (I கொரி 4:6) வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சில மொழிபெயர்ப்பு பிழைகள், அச்சு பிழைகள் இருக்கலாம். ஆனால் அர்த்தம் மாறாது. இப்படி ஒரு சில வசனங்களை மாத்திரம் எடுத்து அதற்கு தங்களுடைய புரிந்து கொள்ளுதலை புகுத்தி வேத வசனங்களை புரட்டி, வளைத்து, தேவ ஜனங்களை ஏமாற்றும் இந்த கூட்டம், இன்று தமிழகத்தின் பல பாகங்களில் நுழைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கள்ள உபதேச கூட்டத்தை குறித்து வேதம் கீழ் கண்ட வசனங்களின் மூலம் நம்மை எச்சரிப்பதை கவனியுங்கள்.
I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
II தீமோத்தேயு 4:3,4 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
தீத்து 1: 14) விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15) சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். 16) அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
II பேதுரு 2:1, கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2) அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3) பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
II யோவான் 1:9) கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 10) ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11) அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.
ஆமென்.
வாலிப பிள்ளைகளே கிராம ஊழியங்களில் இறங்கி கர்த்தரை வைராக்கியமாக அறிவியுங்கள். கள்ள ஊழியர்கள் மூலம் வரும் ஐரோப்பிய, அமெரிக்க விசா முக்கியமல்ல, நல்ல இயேசுவை அறிவித்து ஒரு சீஷனை உருவாக்கினால் கிடைக்கும் பரலோக விசா முக்கியம். எழும்புவீர்களாக !
- loving god.
Comments
Post a Comment