கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு. ""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்"

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு
.
""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்""
.
2. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
9. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.
10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
.
நன்றாக கவனியுங்கள் 
.
வசனம் சொல்கிறது 
.
""திறக்கப்பட்ட புஸ்தகம் ""அவன் கையில் இருந்தது
.
திறக்கப்பட்ட புஸ்தகம் என்றால் ஒரு புஸ்தகம் முடப்பட்டு இருக்க வேண்டும்
.
எது அந்த புத்தகம்?
.
ஆதியாகத்தில் இருந்து வெளி வரைக்கும் நாம் வாசித்தால் அதை அறிந்து கொள்ளலாம்
.
4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
9. அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்
தானியேல் -12
.
வசனம் சொல்கிறது "மூடி முத்திரை போடு"
.
அப்படி என்றால் முடப்பட்ட புஸ்தகம் 
""தானியேல் " 
தீர்க்கதரிசன புத்தகம்
.
அப்படி என்றால் தானியேல் புஸ்தகம் முழவதும் மூடப்பட்டதா?
இல்லை 
முழுவதும் இல்லை
.
தானியேலில் ஒரு தரிசனம் மற்றும் மறைத்து வைக்கப்பட்டது
.
அது எது?
.
நாம் வேதத்தை ஆராய்ந்து படிப்போம் சகோதர சகோதரிகளே
.
15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது
.
இங்கே ஆன்டவர் தம்முடைய சீசர்களுக்கு சொல்கிறார்.
"வாசிக்கிறவன் சிந்திக்ககடவன் "
எதை 
தானியேல் தீர்க்கதரிசனத்தை
.
அப்படி என்றால் தானியேல் புஸ்தகம் முழுமையாக முடப்படவில்லை.
.
ரோமர் -5
6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
.
இங்கே பவுல் சொல்கிறார் 
"குறித்த காலத்தில்"
எதை குறித்த காலம்?
"கிறிஸ்துவின் மரனத்தை "
.
கிறிஸ்துவின் மரனத்தை குறித்தகாலம் எது?
.
தானியேல் -9
24. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
27. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
.
தானியேல் எழுபது வார தீர்க்கதரிசனம் மிக முக்கியமான தீர்க்கதரிசனம்
.
மேசியா எப்போது வருவார்.
எப்போது மரிப்பார் என மிகதுல்லியமாக அறிவித்த தரிசனம் அது
.அப்படி என்றால் பவுல் 70 வார தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்
.
.
சீர்திருத்தத்தின் தந்தை "மார்ட்டீன் லூத்தர் " 
போப்பு மார்க்கத்தை அந்திகிறிஸ்து என்று சொல்லி ரோமசபையை எதிர்த்தார் 
.
எந்த வேத ஆதாரத்தை வைத்து லூத்தர் ரோமசபையை எதிர்த்தார்
.
தானியேல் 7
24. அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; 
அவன் 
முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
25. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
.
லூத்தர் தானியேல் தீர்க்கதரிசனத்தை ஆராய்ந்தார் 
.
தானியேலில் சொல்லப்பட்ட "சின்னகொம்பு " அது அந்திகிறிஸ்துவை குறிக்கிறது என்றும் . அது ரோமசபை என்றும் அறிந்தார்
.
போப்புமார்க்கத்தை அந்திகிறிஸ்து என்று சொன்னார்
.
தானியேல் 1260 வருட தீரக்கதரிசனத்தை லூத்தர் அறிந்திருந்தார் 
.
அந்த அந்த காலத்தின் தீர்க்கதரிசனங்களை தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் எனக்கு பிரியமானவர்களே 
.
அப்படி என்றால் தானியேலில் மூடப்பட்ட தரிசனம் எது?
"2300 ராப்பகல் தரிசனம்""
.
26. சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
.
4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
தானியேல் -12
.
4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
.வெளி -10
.
நன்றாக கவனியுங்கள் 
.
தனியேலுக்கு சொல்லப்பட்ட அதே வார்த்தை 
இங்கே யோவானுக்கு சொல்லப்படுகிறது 
.
""முத்திரை போடு"" 
.
எதை முத்திரை போட வேண்டும்
.
"2300 ராப்பகல் தரிசனத்தை " 
.
வேதாகமத்தில் மிக நீன்ட கால தீர்க்கதரிசனம் "2300 ராப்பகல் தரிசனம்" 
.
வில்லியம் மில்லர் தானியேல் புத்தகத்தை ஆராய்ந்து படித்தார் 
2300 ராப்பகல் செல்லும் பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கபடும் ""
என்ற வசனத்தை கிறிஸ்துவின் இரன்டாம் வருகைக்கான தரிசனம் என்று நினைத்தார்
 ஏனென்றால் அன்றைக்கு உலகத்தை ஆட்சி செய்த ரோமசபை 
பரிசுத்தஸ்தலம் என்பது இந்த பூமி என்று போதனை செய்ததூ
.
அதை வில்லியம் மில்லரும் நம்பினார்
அதன் விளைவு?
பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கபடும் என்ற வசனம் இந்த பூமியை சுத்திகரிப்பதை குறிக்கிறது என்றும் 
இந்த பூமியை சுத்திகரிக்க இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வருவார் என நம்பினார் 
.
1818ம் ஆன்டு இதை அறிந்தார் 
.
2300ராப்பகல் தரிசனத்தை ஆராய 5வருடங்களும் 
அதை சொல்வதா வேண்டாமா
என்ற தயக்கத்திற்கு 9வருடங்கள் என ஏறக்குறைய 13 வருடங்கள் எடுத்து கொன்டார் 
""
2300 ராப்பகல் தரிசனம் கிமு457ல் ஆரம்பித்து 1844ம் ஆன்டு அக்டோபர் 22ம் தேதி முடிகிறது என அவர் ஆராய்ந்து அறிந்து கொன்டார் ""
.
1832ல் தரிசனத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்
"1844ம் ஆன்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி ஆன்டவர் இந்த பூமிக்கு வருவார் " என்று பிரசங்கம் செய்தார்
உலகம் முழவதும் எழுப்புதல் உண்டாயிற்று
.
அநேகர் காத்திருந்தார்கள் 
.
அந்த நாள் வந்தது 
.
கிறிஸ்து வரவிலலை.
.
காத்திருந்த அனைவரும் ஏமாந்தார்கள் 
.
வேதம் சொல்கிறது
10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
.
நன்றாக கவனியுங்கள்
2300 ராப்பகல் தரிசன விளக்கம் 
கிறிஸ்து வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் 
.
வசனம் சொல்கிறது 
.அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது
.
ஆம் கிறிஸ்துவின் வருகை என்ற செய்தி அவர்களுக்கு இனிப்பா இருந்தது 
.
ஆனால் தேவன் வரவில்லை
.
இப்பொழுதோ ஏமாற்றம் 
மிகப்பெரிய ஏமாற்றம்
.
வசனம் சொல்கிறது 
அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
.
ஆம் காத்திருந்த அனைவரும் கசப்பான ஒரு ஏமாற்றத்தை சந்தித்தித்து இருந்தார்கள் 
.
வில்லியம் மில்லர் ஒரு வார்த்தையை தவறாக கனித்தார் 
அது
"பரிசுத்த ஸ்தலம்"
.
அது ஆசரிப்பு கூடாரத்தோடு தொடர்புடையது என்பதை மறந்துவிட்டார் 
.
வெளி 10அதிகாரம் எவ்வளவு துல்லியமாக 1844ம் ஆன்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவேறியது என்று பாருங்கள் 
.
"தேவனுக்கே மகிமை""
.
2பேதுரு 1
21. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
.
தீர்க்கதரிசனம் பரிசுத்த ஆவியாலே எழுதப்பட்டது
.
ஆனால் அநேகர் வேதத்தை அறியாமல் தேவனுடைய வேதத்திற்கு எதிரக பேசுகிறார்கள் 
.
வேதத்தை அறியாமல் தீர்க்கதரிசனத்திற்கு எதிராக பேசிகொன்டு இருக்கிறார்கள்
.
எச்சரிக்கையாய் இருங்கள் சகோதர சகோதரிகளே

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று