இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

"""இப்பொழுது புரிகின்றதா"""
.
பாடம் :2
ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்!
.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள் 
.
உண்மை 1. அது ஒரு மெய்யான சம்பவம்.
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 
அப்போஸ்தலர் 1:9

10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று; 
அப்போஸ்தலர் 1:10

11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 
அப்போஸ்தலர் 1:11
.
இந்நிகழ்ச்சி சிலுவைக்கு பின்பு நிகழ்ந்தது.
உயிர்தெழுந்த இயேசுவின் சரீரத்தில் மாம்சமும் எலும்பும் உண்டாயிருந்தது என லூக்கா 24ல் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே குறிப்பிட்டுள்ள 5வார்த்தைகளை கவனிக்கவும்.
.
1) பார்த்துகொன்டிருக்கையில்,
2) அவர்கள் கண்களுக்கு,
3) பார்த்து கொன்டிருக்கையில்,
4) அண்ணாந்து பார்த்து,
5) கண்களுக்கு முன்பாக
இவையாவும் நேரில் நடந்த ஒரு காட்சியை விவரிக்கிறது.
தூதர்கள் ""அவர் எப்படி சென்றாரோ அப்படியே மறுபடியும் வருவார்"" என்றார்.
.
உண்மை 2. அது காணக்கூடியதாக இருக்கும்.
7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 
வெளிப்படுத்தின விசேஷம் 1:7

.
பூமியிலுள்ள ஒவ்வொருவரின் கண்களும் அவரை பார்க்கும்.
நீதிமான்களும்,  துன்மார்க்கரும் அவரை கான்பார்கள்.
.
30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 
மத்தேயு 24:30

இக்காரியத்தை ஒருபோதும் சாத்தானால் பொய்யாக நடித்துகாட்ட முடியாது.
.
உண்மை 3. அது ஒரு மகிமையான சம்பவம்.
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும், அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். 
சங்கீதம் 50:3

இந்த வசனத்தை மத் 16:27 உடன் ஒப்பிட்டு பாருங்கள்.
27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார், அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 
மத்தேயு 16:27

ஆனால் ரகசியமாக அல்ல,.
நிச்சயமாக பிதாவின் மகிமையோடும் தூதர்களின் மகிமையோடும் வருவார்.
.
தொடரும்......

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று