உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்

""உபத்திரவப்படுத்தப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள்""

.
முன்னுரை:-
.
ஆன்டவராகிய இயேசு கிறிஸ்துவை கிபி 31ல் சிலுவையில் அறைந்து கொன்ற அஞ்ஞான ரோம பேரரசு, 282 வருடங்களுக்கு பிறகு தன்னை கிறிஸ்தவ மத பேரரசாகவே மாற்றி கொன்டது.
வியப்புக்குரிய இம்மாபெரும் வரலாற்று நிகழ்வின் மூலம்,  மெஞ்ஞான கிறிஸ்தவ மார்க்கத்தை சாத்தான் தனது அஞ்ஞான கத்தோலிக்க மதம் என்ற போர்வைக்குள் ஒட்டுமொத்தமாக சுருட்டி வைத்தான்.
கத்தோலிக்கம் என்ற வார்த்தையின் அர்த்தம்
" எம்மதத்தையும் சகித்து கொள்ளுதல்" என்பதாகும்.
ஆனால் கத்தோலிக்கம் என்ற போர்வைக்குள் மெய்கிறிஸ்தவ மெஞ்ஞானம் ஒளித்து வைக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.
.
கத்தோலிக்கம் தோன்றிய கிபி 4ம் நூற்றான்டுக்கு பிறகு, 1200 வருடங்களுக்கு கடந்து கிபி 16ம் நூற்றான்டில் தொடங்கிய சீர்திருத்த எதிர்ப்பியக்கத்தின் மூலம், மெய்கிறிஸ்தவம் மெல்ல மெல்ல வெளிவர தொடங்கியது.
சீர்திருத்த எதிர்ப்பியக்கம் பல சபைகளாய் பிரிந்து கிறிஸ்தவ வேதாகமத்தை வெளியில் கொன்டு வந்தது எனினும், 300 வருடங்களுக்கு பிறகு 19ம் நூற்றான்டின் மத்திய பகுதியில் வெளிப்பட்ட மீதமான இறுதி திருச்சபையே இறுதிகால சத்தியத்தை வெளிப்படுத்த தொடங்கியது.
.
ஏழாம் சபையாகிய இறுதி திருச்சபை வெளிப்பட்ட பிறகு தான்,  மெய்யான திருச்சபையின் வரலாறு வெளிப்படுத்தபட்டது.
இருன்ட காலத்தில் திருச்சபை உலகின் பல பகுதிகளிலும் எவ்வாறு சத்தியத்திற்காக போராடியது என்பது பற்றிய வரலாறும், பத்து கட்டளைகளில் நான்காம் கட்டளைக்காக எத்தகைய சித்திரவதை கொடுமைகளை அது அனுபவித்தது என்பது பற்றிய வரலாறும்,  மீதமான இறுதி திருச்சபையின் மூலமாகவே வெளிப்படுத்தபட்டது.
.
முதலாம் நூற்றான்டு காலத்தில் கிறிஸ்துவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள், மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள பகுதியாகிய பாலஸ்தீன தேசத்திலிருந்து புறப்பட்டு, மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள பல்வேறு தேசங்களுக்கும் சுவிசேச நற்செய்தியை கொன்டு சென்றனர்.
இவர்களில் தோமா என்ற தாமஸ்,  
ஆசியாவின் தென்பகுதி கடல் மார்க்கத்தின் வழியாக இந்திய துனைக்கன்டத்தின் தென்பகுதியான திராவிட தேசத்தின் சேரநாட்டில் வந்திறங்கி தனது ஊழியத்தை முதல் நூற்றான்டின் மத்திய பகுதியில் தொடங்கினார்.
பின்னர் தமிழ்நாட்டின் வடபுலத்தின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியாகிய திருமலை வந்தடைந்து தனது ஊழியத்தை தொடர்ந்தார்.
இன்றைய சென்னையின் தென்பகுதியாகிய சின்னமலையில் அவர் ஊழியம் செய்து கொன்டிருந்தபோது ஆசிய அஞ்ஞானம் அவரை படுகொலை செய்தது.
.
கடல்வழி மற்றும் தரைவழி மார்க்கங்கள் அதிகமாக புழக்கத்தில் இல்லாத காலத்தில்,  இந்திய துனைக்கன்டத்தின் தென்பகுதியில் இருந்த தமிழ்நாட்டிற்கு வந்தடைந்து தேவசெய்தியை விதைத்தார் என்பது தேவசித்தத்தின் படி நிகழ்ந்த ஒன்றாகும்.
அவர் விதைத்த நற்செய்தி என்ற பயிர்,  சீரியா கிறிஸ்தவர்கள்  மற்றும் அபிசினியக் கிறிஸ்தவர்கள் மூலம் நல்ல விளைச்சலை தந்திருந்தது என்பதை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு பிறகு(கிபி 522) அலெக்சாந்திரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தடைந்த காஸ்மாஸ் என்பவர் நற்சான்று பகிர்கிறார்.
.
ஆனால்,  இதற்கு பிறகு ஆயிரம் ஆண்டுகள் கழித்து 16ம் நூற்றான்டில் வந்த ரோமன் கத்தோலிக்கத்தினரும்,  குறிப்பாக இயேசு சங்கத்தினரும் இந்திய துனைக்கன்டத்தின் தென்பகுதியில் விளைந்திருந்த மெய்கிறிஸ்தவர்களை சித்திரதைக்கு உள்ளாக்கி அழித்தொழித்தனர்.
எனினும் 19ம் நுற்றான்டு வரையில் பத்து கட்டளைக்கும் கீழ்படிந்த மெய்கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற ஆதாரப்பூர்வமான வரலாற்று செய்தியை இந்நூலின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
.
18ம் நூற்றான்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் கம்பெனியாளர்கள் மூலமாகவே கிறிஸ்தவம் இந்திய துனைக்கன்டத்திற்குள் பிரவேசித்தது என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களும்,  எழுத்தாளர்களும் இன்னமும் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
மெய்கிறிஸ்தவம் என்பது இந்திய துனைக்கன்டத்தின் தென்பகுதியில் கிபி முதல் நூற்றான்டிலே விதைக்கப்பட்டு,  கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக விளைந்த நெடுங்கால பயிர் என்பதை இந்நூலாசிரியர் வரலாற்று சான்றுகளுடன் நிறுவுகிறார்.
.
மெய்யான கிறிஸ்தவ மார்க்கம்,  ஐரோப்பிய தேசங்களில் மட்டுமின்றி,  இந்திய துனைக்கன்டத்தின் தென்பகுதியிலும் எத்தகைய சித்திரவதை கொடுமைகளை அனுபவித்தது என்ற வரலாற்று பதிவுகளை இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இந்நூலில் கூறப்பட்டுள்ள தோமாவின் முதல் நூற்றான்டு காலத்திலிருந்து தோன்றிய மெய்கிறிஸ்தவம் பற்றிய வரலாற்று குறிப்புகளை,  ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்திய இந்திய சமய வரலாற்றில் எங்கும் கானமுடிவதில்லை
.
வரலாற்று ஆசிரியர்கள், மெய்யான தேவமார்க்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை கண்டறிந்து பதிவு செய்திட தவறினாலும், ஒரு காலகட்டத்தில் அவை வெளிப்படவே செய்யும் என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
அவ்வாறு அறிந்துகொள்ள கூடிய காலகட்டம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மிகவும் காலதாமதமாக வந்துள்ளது.
.
இந்திய கிறிஸ்தவர்களும்,  குறிப்பாக தென்னிந்திய கிறிஸ்தவர்களும், ,மீதமான ஏழாம் திருச்சைபினரும் கூட அறிந்திராத அரிய செய்திகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
தோமா விதைத்த மெய்கிறிஸ்தவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் விளைந்த அஞ்ஞான இந்துவ சமைய நூல்களை சொந்தம் கொன்டாடி அவற்றிற்கு கிறிஸ்தவ முத்திரையிட்டு,  திராவிட சமயம் என்று பெயரிட்டு அழைப்பவர்கள் இந்நூலில் கானப்படும் உண்மைகளின் அடிப்படையில் புதிய கோனத்தின் வழியாக சிந்தித்திட வேண்டும்.
.
பத்து கட்டளைகளையும், குறிப்பாக நான்காம் கட்டளையையும் கைக்கொள்ளும் மெய்கிறிஸ்தவ திருச்சபை இருன்ட காலத்தில் வனாந்திர மறைவிடங்களில் பிரவேசித்தது என்றாலும், உலகின் பலபகுதிகளில் அது உயிரோட்டம் உள்ளதாகவே வாழ்ந்தது.
காலங்கள் நெடுகிலும் பல சந்ததிகளின் வழியாக அது ஊடுருவி கொன்டிருந்தது என்பதே வரலாற்று உண்மையாகும்.
.
ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை என்ற ஒன்று தோன்றிய பிறகுதான்,  புரட்டஸ்டன்ட் திருச்சபை வரலாற்றில் ஏழாம்நாள் ஆசரிப்பு தோன்றியது என்று பலரும் தவறாக என்னுகிறார்கள்.
இது உண்மையல்ல என்பதையே இந்நூல் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது..
.
தென்னாசிய திராவிட தேசத்தில் சேரநாடாகிய விளங்கிய தென்பகுதி நிலம் மெய்கிறிஸ்தவத்தின் நாற்றாங்கால் நிலமாக விளங்கியுள்ளது.
அத்தகைய நாஞ்சில் நிலத்திலிருந்து ஓர் ஆவிக்குரிய இளைஞரின் அரிய முயற்சியால் இந்நூல் வெளியிடப்படுகிறது என்பது பெரிதும் பாராட்டுகுரிய ஒன்னறாகும்.
.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று