இயேசு



💥  *இயேசு:*

 👉 *நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்* 

மத்தேயு 5 :17

👉வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், *நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும்,* அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 5 :18

👉 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். 

மத்தேயு 5 :19

👉 இயேசு  பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார்.  *பிரமாணத்தை மாற்றவோ , அழிக்கவோ வரவில்லை*.

👉 பிரமாணத்தின்  ஒரு சிறு எழுத்தும் மாறவில்லை என்று இயேசு சொல்வதை கவனிக்கவும்.

⚡ *பிரமாணத்தை தாக்குபவன் யார்?*

👉உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் *பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்.* அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். 

தானியல் 7 :25

⚡ பிரமாணத்தை அழிப்பவன் சாத்தான்.

👉அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, *தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்,* இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. 

வெளிப்படுத்தின விசேஷம் 12 :17

⚡ பிரமாணத்தை அழிப்பவனும், அதனை கைக்கொள்கிறவர்களை துன்பப் படுத்துகிறவனும் சாத்தான் என்று வேதாகமம் சொல்கிறது.

👉 உங்கள் சிந்தனைக்கு❗

⚡ பிரமாணம் தேவையில்லை என்று சொன்னாலோ , பிரமாணம் ஒழிந்து போகவில்லை என்று  போதிப்பவர்களை *கள்ளத் தீர்க்கதரிசி* என்று  விமர்சித்தாலோ நீங்கள் யாருடைய அணியில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்❗

.👉 இயேசு X சாத்தான்
  
⚡இயேசு பிரமாணத்தை காப்பாற்றினால் சத்துரு பிரமாணத்தை அழிப்பான் 
 

⚡ நீங்கள் பிரமாணத்தை காப்பவரா❓ (அ) அழிப்பவரா❓

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று