கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' .

"கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' . அத்தியாயம் :-2 உன்னை ரட்சிப்பது கிருபையா? கட்டளையா? . ஒரே மாம்சமாக இருப்பார்கள். கிறிஸ்து + சபை= ( நீங்கள்,நான்,விசுவாசிகள்.) . இப்போது கட்டளை என்னை பாவி என்று சொல்லமுடியாது. ஏன்? இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது மனிதன். ஆதாமை போல் புதிய மனிதன். புதிய சிருஷ்டி. புதிய மனிதனாகிய அவனுக்குள் பாவம் இல்லாதபோது, கற்பனை அவனை ஆளுகை செய்யமுடியாது. . ஒருவன் பணம் எடுக்க வேண்டுமென்றால், இயல்பாகவே வங்கி (bank) அல்லது Atm க்கு போகிறான். அவன் ரேஷன் கடைக்கு போவதில்லை. . வாகனங்கள் ஓட்டும்போது இயல்பாகவே இடதுபக்கம் ஓட்டுகிறோம். வலது பக்கம் ஓட்டுவதில்லை. இது நம் இருதயங்களில் பதிந்து இருக்கிறது. பழகிவிட்டது. . அது போலவே நீதியின் வசனத்தில் படிக்கப்பட்டுவிட்டால் அது நமக்கு பாரம் கிடையாது. பிரியமானவர்களே, தன்னிச்சையாகவோ அல்லது இயல்பாகவே நாம் இறைவனின் வழிகளை பின்பற்றி நடக்கிறவர்களாக நம் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும...