மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2 Timothy/2 தீமோத்தேயு 3
1 மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
1 This know also, that in the last days perilous times shall come.
2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
2 For men shall be lovers of their own selves, covetous, boasters, proud, blasphemers, disobedient to parents, unthankful, unholy,
3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
3 Without natural affection, trucebreakers, false accusers, incontinent, fierce, despisers of those that are good,
4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
4 Traitors, heady, highminded, lovers of pleasures more than lovers of God;
5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
5 Having a form of godliness, but denying the power thereof: from such turn away.
Comments
Post a Comment