ஆக்கினை_தீர்ப்பு_உண்டு
#ஆக்கினை_தீர்ப்பு_உண்டு. தேவனை விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு. விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் [மாற்கு:16:16].அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று [யோவான்:3:18]. நம்முடைய தேவனாகிய கர்த்தர் தன் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி நம்மை மீட்டுக் கொள்ளும்படி நம்முடைய பாவங்கள் அக்கிரமங்களுக்காக அவரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது இந்த ஆக்கினை தீர்ப்பினின்று விடுவிக்கப்படுவான். இயேசு கிறிஸ்து கூறுகிறார் என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 1) #சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்...